நித்திலக்குவியல்

என்னை பற்றி|

====================

நித்திலக்குவியல்

====================

திருவள்ளுவர் ஆண்டு , 2012 ரௌத்திரி--பங்குனி-சித்திரை

ஏப்ரல்-மே - 1981

முத்து 12-19-20

  பேராசிரியர் ஔவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் பெரும்புகழ் வாழ்க! சில திங்களாகத் தமிழகத்தைப்பற்றிய துன்பம் தொடர்ந்து வருகிறது. தவத்திரு ஞானியாரடிகள், தமிழ்க்கடல் மறைமலை யடிகளார், தமிழ்ப் பெரியார் திரு. வி. க. போன்று தமிழுக்கு அரணாக விளங்கிய தமிழ்ச்சான்றோர்களின் மறைவுக்குப் பின் அவர்கள் விட்டுச் சென்ற அரும்பணிகளைத் தொடர்ந்து செய்து தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழின உணர்வையும் போற்றி வளர்த்து வந்த அடுத்த வரிசையைச் சார்ந்த பேரறிஞர்கள் ஒருவர் பின் ஒருவராய் மறைந்துவருவது தமிழுக்கும் தமிழகத்துக்கும் பேரிழப்பாகும். இவ் வவல நிலையை எண்ணித் தமிழுணர்வுடைய நெஞ்சங்கள் ஏங்குகின்றன.

  அண்மையில் பன்மொழிப் புலவர் மீனாட்சிசுந்தரனார், மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், தவத்திரு அழகரடிகளார் ஆகிய தமிழ்ச் சான்றோர்கள் மறைந்தனர். அத்துயரம் நம் நெஞ்சை விட்டு அகல்வதற்கு முன்னே உரைவேந்தர்-சித்தாந்த கலா நிதி, பேர சிரயர் ஒளவை சு துரைசாமிப் பிள்ளை அவர்கள் மறைந் தார்கள் என்னும் செய்தி நம்மை அதிர்ச்சி அடையச் செய்துவிட்டது.

  பேராசிரியர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் தென் னார்க்காடு மாவட்டத்தில் உள்ள ஒளவையார் குப்பம் என்னும் சிற்றூரில் பிறந்தார். தமிழ் செய்த புண்ணியத்தால் அவர் வேங்கட சாமி நாட்டாரிடத்தும் கரந்தைக் கவியரசரிடத்தும் தமிழ் பயின்று பெரும்புலமை பெற்றார். வட ஆர்க்காடு மாவட்டக் கழக ஆட்சியி லிருந்த காவேரிப்பாக்கம், செங்கம். சேயாறு. போளூர் உயர் நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியராய்ச் சிறந்த பணி ஆற்றிப் புகழ்பெற்றார்.

  அவர் சேயாறு கழக உயர் நிலைப் பள்ளியில் பணியாற்றிய போது அவர் உழைப்பால் மாணவர்கள் மட்டுமல்லாமல் மற்றவர் களும் தமிழ்ப்புலமையும், தமிழ் உணர்வும் பெற்றனர். அவருடைய உழைப்பால் ஊரே தமிழ் மணம் பெற்றது. அவர் உரை எழுதும் திறமை புலப்படச்செய்த பெருமையும் சேயாற்றுக்கு உண்டு. அவர் முதன்முதலாக ஐங்குறு நூறு என்னும் சங்க இலக்கியத்தின் முதல் தூறு பாடல்களுக்கு எழுதிய உரை அப்போதுதான் வெளிவந்தது.

  பின்னர் அவருடைய பெரும்புலமையால் திருவேங்கடவன் பல்கலைக் கழகத்திலும், அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆராய்ச் சித் துறையிலும் மதுரைத் தியாகராசர் கல்லூரியிலும் பணியாற்றி விழுப்புகழ் பெற்றார் ; 1968-இல் ஓய்வு பெற்றார். ஓய்வுபெற்ற பின்னும் ஓயாது உழைத்தார்; தமிழ் வளர்த்தார் : தமிழின உணர்வை வளர்த்தார் ; தமிழ்ப் பண்பாடுகளைப் போற்றிக் காத்தார். புறநானூறு, பதிற்றுப்பத்து, மணிமேகலை முதலிய பழந் தமிழ் இலக்கியங்களுக்கு மரபுவழி தவறாமல், உரை எழுதி ' உரை வேந்தர்' எனப் பாராட்டப் பெற்றார்.

  பேராசிரியர் அவர்கள் தூய தமிழுணர்வுடன் சைவ சமயப்பற்றும் வாய்ந்தவர் ; எனினும் மூடப் பழக்கவழக்கங்களை வெறுப்பவர்; சீர்திருத்த நோக்கம் உடையவர் ; பகுத்தறிவுப் பகலவனாக விளங்கிய பெரியாரிடத்தும், பேரறிஞர் அண்ணா அவர்களிடமும் பேரன்பும் பெருமதிப்பும் கொண்டவர்; அவர்களால் பெரிதும் மதித் துப் பாராட்டப்பட்டவர் ; சுருங்கச் சொன்னால் பழமைக்கும் புது மைக்கும் பாலமாய் விளங்கியவர். இன்று மலர்ந்துள்ள தமிழாட்சிப் பயிர்செழிக்க அன்று தம் உழைப்பு எனும் எருவிட்டு, தமிழ் உணர்வு எனும் நீர்பாய்ச்சி வளர்த்த சான்றோர்களுள் நம் பேராசிரியர் அவர் கட்கும் பெரும் பங்கு உண்டு. அவர்கள் ஊட்டிய தமிழ் உணர்வு படிப்படியாக இப்போது மங்கி வருவது நமக்கு வேதனை தருகிறது. இந்த நேரத்தில் அவர்களுடைய மறைவு அந்த வேதனையை மேலும் மிகுவிக்கிறது.

  பேராசிரியர் அவர்கள் மறைந்தாலும் அவர் எழுதிய நூல்கள், உரைகள், அவர் பேசிய பேச்சுக்கள், ஆற்றிய விளக்கவுரைகள் முதலியன நமக்கு வழிகாட்டுவனவாக உள்ளன. அவ்வழி நடந்து, அவர்கள் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்ந்து செய்து அவர்கள் போற்றி வளர்த்த தமிழ் உணர்வு எதிர்கால இளைஞர்களிடம் மங் காமல் செழித்துவளரப் பாடுபடுவதே நம் தலையாய கடமையாம்.

  பேராசிரியர் அவர்கள் பிரிவால் வருந்தும் அருமை நண்பர் ஔவை து.நடராசன் அவர்கட்கும், அவர்தம் உடன்பிறந்தார்க்கும் உற்றார் உறவினர்கட்கும் மன்றச் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத தெரிவித்துக் கொள்கிறோம். தம் தந்தையாரைப் போல அறிவும், ஆற்றலும், சொல்வன்மையும் வாய்க்கப்பெற்ற அவர்கள் தந்தை யார் விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்து அவர் புகழ் தமிழகத்த என்றும் பசுமையாக இருக்கப் பாடுபட வேண்டுகிறோம்.

-----------------------

Create AccountLog In Your Account