வந்தார் ஒரு துரை (சாமி) / 26.02.2019

செய்தித்தாள் கட்டுரைகள்|

சுதந்திரத்திற்குமுன் துரை என்றால் வெள்ளையன்

அவன் வாயில் தமிழ் பெற்ற துன்பம்

அய்யகோ சொல்லி மாளா

பின்னர் வந்தார் ஒரு துரை (சாமி)

தமிழ் பெற்றது பேரின்பம்

தமிழ் பிழைத்தது தேன் போல் இனித்தது

ஒரு துரை சென்றான் ஒரு துரை வந்தார்

பின்னர் யார் என்ற தமிழர்க்கு

மகனை நோக்கி நட ராசா என்றார்

அவரும் நடந்தார் தமிழில் பல்கலை வளர்த்தார்

மணிமகுடமாக பத்மஸ்ரீ வென்றார்

இனி யார் என்ற கேள்வி எனக்கு

(அவ்வை)குப்பத்து (துரை) சாமியும் ஆலயத்து நடராசரும்

தமிழ் பால் கொண்ட அன்பால்

அருள் பாலிதுள்ளனர் நமக்கு

அடுத்து என்ன? பொறுத்திருந்து பார்போம்!!

Create AccountLog In Your Account