அலை பார்த்து தலை வார முடியாது;

செய்தித்தாள் கட்டுரைகள்|

அலை பார்த்து தலை வார முடியாது;

ஆனால், ஔவை அருள் பார்த்து தமிழ் கூற முடியும்

ஒரே குடும்பத்தில் இரண்டு தமிழறிஞர்கள் இருக்க

மூன்றாவது அறிஞனாய் தன்னை மும்மொழிந்துக்கொண்டவன்

இவன் பிறை சூடி சிவன் இல்லை ஆத்திசூடி மகன்

கனவுகள் தேவை என்று அதிகம் தூங்காதவன்

அருந்தமிழில் அயல் மொழியை ஆய்ந்தவன்

சேக்ஸ்பியரை முனைவரில் தோய்ந்தவன்

விடிந்த பிறகும் வெண்ணிலாவாய்க் காய்ந்தவன்

தாத்தா, தந்தையாய் தன்னை மொழிபெயர்த்ததால்

இன்று மொழிபெயர்ப்புத் துறையில் இயக்குநராக இருக்கிறான்

ஒரு வரி பழமொழி,

இரு வரி திருக்குறள்,

மூவரி ஐக்கூ,

நான்கு வரி வெண்பா என

வரிவரியாக வளர்ந்து தற்போது அளவிடமுடியாத ஆசிரியப்பாவாய் நீண்டு  நிற்கிறான்!.

பாரதியின் வார்த்தையால் உன்னைப் பாராட்டுகிறேன்

"பெரிய கடவுள் காக்க வேண்டும்"

--- கபிலன்

Create AccountLog In Your Account