இளந்தமிழர் இலக்கியப் பட்டறை மதுரை 19.08.2019 வரவேற்புரை முனைவர் ந.அருள். பெருமதிப்பிற்குரிய மாணவச் செல்வங்களே, இன்று நம் மத்தியில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் இருக்கிறார்கள். நமக்கு ஒரு மிகப்பெரிய வகுப்பை எடுக்க மதுரை உலகத்தமிழ்ச் சங்கத்துக்கு வருகை புரிந்திருக்கிறார்கள். அமைச்சர் பெருந்தகையின் ஒரு மாபெரும் சிறப்பு எதுவென்றால், ஏறக்குறைய ஒரு முப்பதாண்டுகளுக்கு முன்பு, தன்னுடைய சொந்த உழைப்பால், Mafoi என்ற ஒரு பெரிய நிறுவனத்தை அவரும், அவருடைய திருமதியார் திருமதி லதா அவர்களும் தொடங்கினார்கள். Mafoi என்றால் அது ஒரு பிரஞ்சு சொல். நான் எதை சொல்ல விரும்புகிறேன். உண்மையாக சொல்ல விரும்புகிறேன் என்ற சொல்லின் பொருள்தான் Mafoi. இந்நிறுவனத்தின் மூலம் ஏறக்குறைய இலட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியிருக்கிற ஒரு உன்னத நிறுவனமாக அந்த நிறுவனத்தை இன்றைக்கு அவர் மாற்றிக் காட்டியிருக்கிறார். நீங்கள் எல்லோரும் மிகவும் வியந்து பார்க்கின்ற Hyudai நிறுவனமாகட்டும், Saint Gobain நிறுவனமாகட்டும் மிகப் பெரிய நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளை தெரிவு செய்து, தேர்ந்தெடுத்து அனுப்பும் பணியை Mafoi செய்து வருகிறது. இன்றைக்குக்கூட செய்தித்தாள்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். கருணாஸ் அவர்கள் சொன்னது போலதான், எதைப் பற்றியும் மிக நுணுக்கமாக, நுட்பமாக வாசிக்கும் திறன் வாய்ந்தவர். இன்றைக்கு தமிழகத்தில், மாண்புமிகு அம்மா அவர்களுக்கு மத்தியில், ஜி.எஸ்.டி.-யைப் பற்றி மிக விளக்கமாக பேசியவர் நம் அமைச்சர்தான். ஆட்டோமொபைல் துறை தொய்வடைந்துள்ளதை கண்டு, அதை மீண்டும் வளர்ச்சி அடைய வைக்க மத்திய அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளதைக் காணலாம். எல்லா மாணவர்களும், எங்களைப் போன்ற அரசுத்துறை அலுவலர்கள் அனைவரையும் முகநூலில் மட்டுமல்ல, டிவிட்டரிலும் நீங்கள் எல்லாம் இருக்க வேண்டும் என்று எங்களுக்கு அறிவுரை செய்தவர். பொதுவெளியில் எப்படியெல்லாம் நாம் இருக்கலாம் என்பதற்கு, ஒரு வடிவமாக இருப்பவர்தான் நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அவர்கள். நண்பர்களே, வருகின்ற 21ஆம் தேதியுடன் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தமிழ் வளர்ச்சித்துறையின் அமைச்சராக வந்து ஈராண்டுகள் நிறைவடைகிறது. இந்த ஈராண்டு காலத்தில் அவர் கொண்டு வந்த திட்டங்கள். நூற்றுக்கணக்கான திட்டங்கள். இதனால், எங்களை வியப்பில் ஆழ்த்தியவர். இன்றைக்கு தமிழகமெங்கும் நீங்கள் எந்த இடத்திற்குச் சென்றாலும், தமிழ் வளர் மையம் என்பதை நாம் தோற்றுவிக்க வேண்டும். இந்தியா மற்றும் உலகிலுள்ள பல நாடுகளிலும் தமிழ் வளர் மையம் அவருடைய முயற்சியால் தொடங்கப்பட்டுள்ளது. அதைப்போல, தமிழ் பண்பாட்டு மையம் என்பதும் அவரின் முயற்சியால்தான் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. உங்களைப் போன்ற தமிழ் மாணவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து நீங்கள் எல்லாம் தமிழ் மொழிக்கு என்ன செய்திருக்கிறீர்கள் என்று கேட்பதற்கு அவருடைய, ஆங்கிலத்தில் சொல்வார்கள், Pet Child, Pet Project என்று. அப்படி ஒரு திட்டம்தான் சொற்குவை. இத்திட்டத்தின் மூலம் எல்லோரும் ஏறக்குறைய ஆங்கிலத்தில் பத்து இலட்சம் சொற்கள் உள்ளது என்று தெரிவிக்கும்போது, தமிழிலும் அதுபோல சொற்களை தொகுக்க வேண்டும் என்று இத்திட்டத்தை கொண்டு வந்தவர் நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அவர்கள். அவரால்தான் ஒல்காப் புகழ் பெற்ற தொல்காப்பியருக்காக சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஒரு திருவுருவச் சிலை அமைத்தார். இந்த இளந்தமிழர் இலக்கியப் பட்டறையில் இலக்கிய வினாடி-வினா நடத்த வேண்டும் என்பது அவருடைய ஆவல்தான். திருக்குறளின் நுட்பங்களை நீங்கள் எல்லாம் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக திருக்குறளுக்கு ஒரு வினாடி-வினா நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் திரு.விஜயராகவன் அவர்களிடம் அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார். நண்பர்களே, அமைச்சர் அவர்களிடம், கலைப் பண்பாடு, தமிழ் வளர்ச்சி, தொல்லியல், அருங்காட்சியகம் என எல்லா துறைகளிலும் அங்கிங்கெனாதபடி இன்றைக்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அண்மையில் உலகத்தமிழ் மாநாடு சிகாகோ மாநகரில் நடைபெற்றபோது, நாங்கள் எல்லாம் கண்டு நெகிழ்ந்தோம். காரணம், அங்கிருந்த தமிழ் அறிஞர்களுக்கிடையில், கீழடி நம்முடைய தாய் மடி என்று சொல்லி ஒரு அற்புதமான காட்சியுரையைக் காட்டினார்கள். அவருடைய நிறுவனத்தின் சிறப்பே என்னவென்றால், எதையுமே நாம் புதிதாக செய்ய வேண்டும். அதை Innovate செய்து, அழகாக Deliver செய்ய வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவருடைய ஒரு பாடமாகவே உள்ளது. எனவே, தமிழ் வளர்ச்சித்துறையில் புதிய பரிமாணங்களை தமிழ் வளர்ச்சித்துறையும், உலகத் தமிழழராய்ச்சி நிறுவனமும், தமிழ்ப் பல்கலைக்கழமும், மொழிபெயர்ப்புத்துறையும் செய்ய வேண்டும் என்பது அவருடைய விழைவு. கடந்த எட்டாண்டுகளில் இளந்தமிழர் இலக்கியப் பட்டறையில் முதன் முறையாக ஒரு மாண்மிகு அமைச்சர் பெருந்தகை மாணவர்களுக்கு பாடம் நடத்த வந்திருக்கிறார். இதுதான் உங்களுக்கு வரலாற்றுச் சிறப்பு. நீங்கள் எல்லோரும் பள்ளியில் படிக்கும்போது, தலைமையாசிரியர் வந்த பாடம் நடத்தினாரா என்றால் இருக்காது. ஆனால், அந்த வாய்ப்பை மீறி இன்று ஒரு அமைச்சர் உங்களுக்கு வகுப்பு நடத்த வருகிறார். வருக அமைச்சர் பெருந்தகை அவர்களே! உங்கள் உரையைத் தருக! இளந்தமிழர் இலக்கியப் பட்டறை மதுரை 19.08.2019 வரவேற்புரை முனைவர் ந.அருள். பெருமதிப்பிற்குரிய மாணவச் செல்வங்களே, இன்று நம் மத்தியில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் இருக்கிறார்கள். நமக்கு ஒரு மிகப்பெரிய வகுப்பை எடுக்க மதுரை உலகத்தமிழ்ச் சங்கத்துக்கு வருகை புரிந்திருக்கிறார்கள். அமைச்சர் பெருந்தகையின் ஒரு மாபெரும் சிறப்பு எதுவென்றால், ஏறக்குறைய ஒரு முப்பதாண்டுகளுக்கு முன்பு, தன்னுடைய சொந்த உழைப்பால், Mafoi என்ற ஒரு பெரிய நிறுவனத்தை அவரும், அவருடைய திருமதியார் திருமதி லதா அவர்களும் தொடங்கினார்கள். Mafoi என்றால் அது ஒரு பிரஞ்சு சொல். நான் எதை சொல்ல விரும்புகிறேன். உண்மையாக சொல்ல விரும்புகிறேன் என்ற சொல்லின் பொருள்தான் Mafoi. இந்நிறுவனத்தின் மூலம் ஏறக்குறைய இலட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியிருக்கிற ஒரு உன்னத நிறுவனமாக அந்த நிறுவனத்தை இன்றைக்கு அவர் மாற்றிக் காட்டியிருக்கிறார். நீங்கள் எல்லோரும் மிகவும் வியந்து பார்க்கின்ற Hyudai நிறுவனமாகட்டும், Saint Gobain நிறுவனமாகட்டும் மிகப் பெரிய நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளை தெரிவு செய்து, தேர்ந்தெடுத்து அனுப்பும் பணியை Mafoi செய்து வருகிறது. இன்றைக்குக்கூட செய்தித்தாள்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். கருணாஸ் அவர்கள் சொன்னது போலதான், எதைப் பற்றியும் மிக நுணுக்கமாக, நுட்பமாக வாசிக்கும் திறன் வாய்ந்தவர். இன்றைக்கு தமிழகத்தில், மாண்புமிகு அம்மா அவர்களுக்கு மத்தியில், ஜி.எஸ்.டி.-யைப் பற்றி மிக விளக்கமாக பேசியவர் நம் அமைச்சர்தான். ஆட்டோமொபைல் துறை தொய்வடைந்துள்ளதை கண்டு, அதை மீண்டும் வளர்ச்சி அடைய வைக்க மத்திய அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளதைக் காணலாம். எல்லா மாணவர்களும், எங்களைப் போன்ற அரசுத்துறை அலுவலர்கள் அனைவரையும் முகநூலில் மட்டுமல்ல, டிவிட்டரிலும் நீங்கள் எல்லாம் இருக்க வேண்டும் என்று எங்களுக்கு அறிவுரை செய்தவர். பொதுவெளியில் எப்படியெல்லாம் நாம் இருக்கலாம் என்பதற்கு, ஒரு வடிவமாக இருப்பவர்தான் நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அவர்கள். நண்பர்களே, வருகின்ற 21ஆம் தேதியுடன் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தமிழ் வளர்ச்சித்துறையின் அமைச்சராக வந்து ஈராண்டுகள் நிறைவடைகிறது. இந்த ஈராண்டு காலத்தில் அவர் கொண்டு வந்த திட்டங்கள். நூற்றுக்கணக்கான திட்டங்கள். இதனால், எங்களை வியப்பில் ஆழ்த்தியவர். இன்றைக்கு தமிழகமெங்கும் நீங்கள் எந்த இடத்திற்குச் சென்றாலும், தமிழ் வளர் மையம் என்பதை நாம் தோற்றுவிக்க வேண்டும். இந்தியா மற்றும் உலகிலுள்ள பல நாடுகளிலும் தமிழ் வளர் மையம் அவருடைய முயற்சியால் தொடங்கப்பட்டுள்ளது. அதைப்போல, தமிழ் பண்பாட்டு மையம் என்பதும் அவரின் முயற்சியால்தான் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. உங்களைப் போன்ற தமிழ் மாணவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து நீங்கள் எல்லாம் தமிழ் மொழிக்கு என்ன செய்திருக்கிறீர்கள் என்று கேட்பதற்கு அவருடைய, ஆங்கிலத்தில் சொல்வார்கள், Pet Child, Pet Project என்று. அப்படி ஒரு திட்டம்தான் சொற்குவை. இத்திட்டத்தின் மூலம் எல்லோரும் ஏறக்குறைய ஆங்கிலத்தில் பத்து இலட்சம் சொற்கள் உள்ளது என்று தெரிவிக்கும்போது, தமிழிலும் அதுபோல சொற்களை தொகுக்க வேண்டும் என்று இத்திட்டத்தை கொண்டு வந்தவர் நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அவர்கள். அவரால்தான் ஒல்காப் புகழ் பெற்ற தொல்காப்பியருக்காக சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஒரு திருவுருவச் சிலை அமைத்தார். இந்த இளந்தமிழர் இலக்கியப் பட்டறையில் இலக்கிய வினாடி-வினா நடத்த வேண்டும் என்பது அவருடைய ஆவல்தான். திருக்குறளின் நுட்பங்களை நீங்கள் எல்லாம் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக திருக்குறளுக்கு ஒரு வினாடி-வினா நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் திரு.விஜயராகவன் அவர்களிடம் அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார். நண்பர்களே, அமைச்சர் அவர்களிடம், கலைப் பண்பாடு, தமிழ் வளர்ச்சி, தொல்லியல், அருங்காட்சியகம் என எல்லா துறைகளிலும் அங்கிங்கெனாதபடி இன்றைக்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அண்மையில் உலகத்தமிழ் மாநாடு சிகாகோ மாநகரில் நடைபெற்றபோது, நாங்கள் எல்லாம் கண்டு நெகிழ்ந்தோம். காரணம், அங்கிருந்த தமிழ் அறிஞர்களுக்கிடையில், கீழடி நம்முடைய தாய் மடி என்று சொல்லி ஒரு அற்புதமான காட்சியுரையைக் காட்டினார்கள். அவருடைய நிறுவனத்தின் சிறப்பே என்னவென்றால், எதையுமே நாம் புதிதாக செய்ய வேண்டும். அதை Innovate செய்து, அழகாக Deliver செய்ய வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவருடைய ஒரு பாடமாகவே உள்ளது. எனவே, தமிழ் வளர்ச்சித்துறையில் புதிய பரிமாணங்களை தமிழ் வளர்ச்சித்துறையும், உலகத் தமிழழராய்ச்சி நிறுவனமும், தமிழ்ப் பல்கலைக்கழமும், மொழிபெயர்ப்புத்துறையும் செய்ய வேண்டும் என்பது அவருடைய விழைவு. கடந்த எட்டாண்டுகளில் இளந்தமிழர் இலக்கியப் பட்டறையில் முதன் முறையாக ஒரு மாண்மிகு அமைச்சர் பெருந்தகை மாணவர்களுக்கு பாடம் நடத்த வந்திருக்கிறார். இதுதான் உங்களுக்கு வரலாற்றுச் சிறப்பு. நீங்கள் எல்லோரும் பள்ளியில் படிக்கும்போது, தலைமையாசிரியர் வந்த பாடம் நடத்தினாரா என்றால் இருக்காது. ஆனால், அந்த வாய்ப்பை மீறி இன்று ஒரு அமைச்சர் உங்களுக்கு வகுப்பு நடத்த வருகிறார். வருக அமைச்சர் பெருந்தகை அவர்களே! உங்கள் உரையைத் தருக! இளந்தமிழர் இலக்கியப் பட்டறை

இளந்தமிழர் இலக்கியப் பட்டறை

32 d ago

  • 1970

Create AccountLog In Your Account