நட்பு மலர்களின் வாழ்த்து மகரந்தங்கள்!

கடிதங்கள்|

பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசனார் வாழத்துகிறார்.

நட்பு மலர்களின் வாழ்த்து மகரந்தங்கள்!

20 ஆம் ஆண்டில் புதிய வாணிகம்

பேராசிரியரும் கவியரசருமாகிய நண்பர் உசேன் அவர்களை,40 ஆண்டுகளுக்கு முன்னரே நான் நன்கறிவேன்.அருமைப்புலவர் உசேன்,புதுக்கல்லூரியில் பணியாற்றும்போதே மாணவரிடையே பெரும்புகழ் பெற்றவர்.

 கவிதை புனையும் ஆற்றலோடு கட்டுரை எழுதும் கலைத்திறமையும் வாய்ந்த புலவர் உசேன்,புதிய வாணிகம் இதழைப் பொலிவோடு நடத்தி வருகிறார்.நுணுக்கமான தொழில் திறமைகளையும்,வணிக நுட்பங்களையும் கொண்ட நல்லிதழைத் தொடர்ந்து நடத்துவது அருமையுடைய பணியாகும்.

 இலக்கியத்துறையில் தனிப்புலமை வாய்ந்த தகுதியோடு வாணிகத்தில் தொழில் வல்லுநர்களை அறிமுகம் செய்வதோடு,வளர்ந்துவரும் தொழில் மாட்சிகளையும் இந்த ஏடு கொண்டு,எழிலோடு மிளிர்கிறது.

நட்புநலம் வாய்ந்த புலவர் உசேன் அவர்களின் முயற்சி வெல்க!

புதிய வாணிகம் தொடர்ந்து மலர்ந்து வணிக உலகத்துக்கு வளம் சேர்க்குமாக!

கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த பட்டாபிராமன் அவர்களும் தமிழ்க்கடல் ஔவை நடராசனார் அவர்களும் மாணவர்களாக இருந்த காலத்தில் இராமயணத்தை கேலி செய்து நடித்த நாடகத்தில் திரு பட்டாபி இராமராகவும் ஔவை அவர்கள் இலக்குவனனாக நடித்தார் என்பதை முன்னாள் அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

Create AccountLog In Your Account